ஏழுமலையான் கோவில் ஜீயர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

0 2468
ஜீயர்கள் இருவரும் முகாமில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜீயர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து முகாமில் தனிமைப்படுத்திச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜீயர்களான சடகோப ராமானுஜ பெரிய ஜீயர், சடகோப ராமானுஜ சின்ன ஜீயர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரையும் திருப்பதியில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் அனைத்துக் கைங்கரியங்களுக்கும் ஜீயர்கள் கண்காணிப்பாளர்களாகச் செயல்படுகின்றனர். ஜீயர்கள் சிகிச்சை முடிந்து மடத்திற்குத் திரும்பும்வரை ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கைங்கரியங்களைக் கண்காணிப்பது யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. மேலும் பக்தர்கள் தரிசனத்தை நிறுத்துவது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments