கோழிக்கோடு நகைக்கடைகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை : சுமார் 100 கிலோ தங்கம் கேரளாவுக்குள் புழங்குவதாக தகவல்
கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் அளித்த வாக்குமூலத்தையடுத்து கோழிக்கோடு நகரில் உள்ள நகைக் கடைகளில் கடத்தல் தங்கம் வாங்கப்பட்டதா என சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது தங்கம் கொள்முதலில் முறைகேடுகள் கண்டறியப்பட்டதையடுத்து Heza தங்க நகைக்கடை அதிபர்களான அப்துல் ஷமீன் மற்றும் ஜிப்சால் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர்.
கேரளாவின் முன்னணி தங்க நகை வியாபாரிகளான இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் இருந்து கேரளாவில் தங்க வியாபாரத்தை என்.ஐ.ஏ.அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சுமார் 100 கிலோ எடை கொண்ட தங்கம் வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வரப்பட்டதாக புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments