உத்தரப்பிரதேசத்தில் மினி ஊரடங்கை வழிகாட்டலுடன் அறிவித்தது மாநில அரசு
உத்தரப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் காரணமாக நேற்றிரவு பத்து மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை மினி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வழிகாட்டல்களை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இக்காலகட்டத்தில் அனைத்து அலுவலகங்களும் கடைகளும் மூடப்பட்டிருந்தாலும், அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.ரயிலில் வருவோருக்காக பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
உள்நாட்டு விமான சேவையும் நிறுத்தப்படாது.தேசிய நெடுஞ்சாலைகளில் சரக்கு வாகனங்கள் செல்ல தடையில்லை. அவற்றுக்கு தேவையான பெட்ரோல் பங்குகளும் சாலையோர தாபா உணவகங்களும் இயங்கலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மினி ஊரடங்கை வழிகாட்டலுடன் அறிவித்தது மாநில அரசு | #UttarPradesh | #MiniLockdown https://t.co/wzDixUwCHd
— Polimer News (@polimernews) July 18, 2020
Comments