இந்து மதத்தை விமர்சிப்போரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் - நடிகர் சரத்குமார்

0 6416
கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு சரத்குமார் கடும் கண்டனம்

இந்துக்களை, இந்து மதத்தை விமர்சிக்கின்ற கூட்டத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்து பாடம் புகட்டவேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்தவர்கள் இயக்கிவிடப்பட்ட மூடர்கள் என விமர்சித்துள்ளார். பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் வாழ்ந்து வருகின்ற கலாச்சாரம், தெய்வ வழிபாடு, நம்பிக்கை,இவைகளை கொச்சை படுத்துவர்களுக்கு கொடுக்கின்ற தண்டனையானது, இனி ஆண்டாண்டு காலத்திற்கு எந்த மூடர்களும் வாய் திறவாமல், நம் இந்துக்கடவுள்களை விமர்சிக்க முடியாத அளவிற்கு இருக்கவேண்டும் என்றும் சரத்குமார் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.

எந்த மதத்தையும் இழிவு படுத்தக்கூடாது என்ற எண்ணத்தோடு ஒற்றுமையாக வாழ்ந்துவரும் நம்மிடையே பிரிவினை என்ற விஷத்தை விதைப்பவர்கள் என கருப்பர் கூட்டத்தை குறிப்பிட்டுள்ள சரத்குமார், அவர்களை வன்மையாக கண்டிப்பதாகவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார். இந்த கறுப்பர் மந்தைகள் மற்ற மதத்தை அந்த மத போதனைகளை விமர்சிக்க தைரியம் இருக்கிறதா எனவும் சரத்குமார் வினவியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments