இந்தியா- அமெரிக்கா இடையே அவசர கால கச்சா எண்ணெய் சேமிப்பு ஒப்பந்தம்
அமெரிக்காவும் இந்தியாவும் அவசர கால கச்சா எண்ணெய் கையிருப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
அமெரிக்காவின் எண்ணெய் சேகரிப்பில் இந்தியாவுக்கான எண்ணெய் சேகரிப்பதற்கும் இது வகை செய்யும். அமெரிக்க எரிபொருள் அமைச்சர் டான் புரவ்லிட் Dan Brouillette இந்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் பங்கேற்ற காணொலி மாநாட்டில் பேசுகையில் இதனை தெரிவித்தார்.
அடுத்த சில மாதங்களில் இதற்கான திட்டங்களை இருநாட்டு அதிகாரிகளும் விவாதிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா ஏற்கனவே 5 புள்ளி 33 மில்லியன் டன் எண்ணெயை தமது ஸ்டோரேஜில் சேமித்து மேலும் 9 மில்லியன் டன் எண்ணெய் வளைகுடாவில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களில் சேமித்து வைத்துள்ளதாக கடந்த மே மாதம் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
Comments