கொரோனா தொற்று அச்சம் காரணமாக ஒரு லட்சம் "மின்க்"களைக் கொல்ல முடிவு
ஸ்பெயினில் கொரோனா தொற்றுக்கு காரணமாகக் கருதப்படும் மின்க் என்ற விலங்கை ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையில் கொல்வதற்கு அந்நாடு உத்தரவிட்டுள்ளது.
கீரியைப் போலக் காணப்படும் இந்தக் கொறி விலங்கு அங்குள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரேகான் பகுதியில் 7 பண்ணைத் தொழிலாளர்களுக்கு கொரோ தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் அங்கு வளர்க்கப்பட்ட மின்க்குகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளதாக பிராந்திய கால்நடை சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.
விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்று பரவுகிறதா என்று முடிவெடுக்க முடியாத நிலையில், பண்ணைகளில் உள்ள 92 ஆயிரத்து 700 மின்க்குகளை கொல்ல ஸ்பெயின் அரசு உத்தரவிட்டுள்ளது.
Spain to cull nearly 100,000 mink in coronavirus outbreak https://t.co/gtSweKam9v
— Guardian news (@guardiannews) July 17, 2020
Comments