'எனக்கும் ஜாம்ஷெட்பூருக்கும் உள்ள நெருக்கம்'- இளமை கால புகைப்படத்தை வெளியிட்ட ரத்தன் டாடா

0 3857

ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள ஜாம்ஷெட்பூர் நகருக்கும் டாடா நிறுவனத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. இங்குதான் , இந்தியாவின் முதல் எஃகு தொழிற்சாலை டாடா நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. டாடா குழுமத்தின் அப்போதைய தலைவர் ஜாம்ஷெட்ஜி நவ்ரோஜியால் 1907 - ம் ஆண்டு ஜாம்செட்பூரில் டாடா ஸ்டீல் நிறுவனம் தொடங்கப்பட்டது.

பிறகு, டாடா மோட்டார்ஸ் , டி.சி.எஸ்,  டாடா மின் உற்பத்தி நிறுவனங்கள் என பல நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இந்த நகரத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் Tata Engineering and Locomotive Company என்ற டெல்கோ நிறுவனமும் இங்தான் உள்ளது. கடந்த 1945- ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிக முக்கியமான தொழிற்சாலை இது. டாடா நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் கார்கள் முதல் ராணுவத்துக்கு பயன்படும் வாகனங்கள் வரை இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது.

இதனால், ஜாம்ஷெட்பூர் நகரம் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவின் மனதுக்கு மிக நெருக்கமானது. இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரத்தன் டாடா அடிக்கடி அந்த கால நினைவுளுடன் பழைய புகைப்படங்களை பதிவிடுவது உண்டு.

அந்த வகையில், ரத்தன் டாடா முதன்முறையாக ஜாம்ஷெட்பூருக்கு விசிட் அடித்த புகைப்படத்தை இப்போது பதிவிட்டுள்ளார். ''ஜாம்ஷெட்பூர் நகருக்கு முதன்முறையாக நான் சென்ற தருணம் அது. கல்லூரி விடுமுறை நாளில் அங்குள்ள டெல்கோ தொழிற்சாலைக்கு வருமாறு என்னை அழைத்தனர். அதன்பேரில், முதன்முறையாக ஜாம்ஷெட்பூருக்கு சென்றேன். டெல்கோ ஆலையையும் சுற்றிப் பார்த்த மகிழ்ந்தேன்'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரத்தன் டாடாவின் இந்த பதிவை இதுவரை 6.45 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். ஆயிரக்கணக்கான கமாண்டுகள் குவிந்தும் வருகின்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments