டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு ரூ. 4,800 கோடி 10 சதவிகித வட்டியுடன் செலுத்த பி.சி.சி.ஐ- க்கு உத்தரவு

0 5994

கடந்த 2008ம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர்  தொடங்கப்பட்டது.இந்தத் தொடரில் ஆடிய முதல் 8 அணிகளில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் ஒன்று.  இந்த அணி ஹைதரபாத்தை சேர்ந்த டெக்கான் கிரானிக்கல் ஹோல்டிங்ஸ் குழுமத்துக்கு சொந்தமானது. 2009- ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி சாம்பியனும் ஆனது. ஆஸ்திரேலிய  அணியின் முன்னாள் கேப்டன் ஆடல் கில்கிரிஸ்ட் தலைமையில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி கோப்பையை வென்று சாதனை படைத்திருந்தது.

 ஐ.பி.எல் தொடரில் 10 ஆண்டுகளுக்கு விளையாடுவதற்காக டெக்கான் சார்ஜர்ஸ் அணி 107 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புக்கு உரிமத்தை பெற்றிருந்தது. ஒரு கட்டத்தில் நிதி நெருக்கடி காரணமாக ,வீரர்களுக்கு சம்பளத்தை செலுத்தாமல் பாக்கி வைத்திருந்தது. சர்ச்சை எழுந்ததால், பி.சி.சி.ஐ டெக்கான் சார்ஜர்ஸ் அணி நிர்வாகத்திடம் ரூ. 100 கோடி வைப்புத் தொகை செலுத்த உத்தரவிட்டது. டெக்கான் சார்ஜர்ஸ் அணி தரப்பில் வைப்புத் தொகயை செலுத்த தவறியதையடுத்து ஐ.பி.ல் தொடரின் நன்மதிப்பு பாதிக்கப்படுவதாக கூறி 2012- ம் ஆண்டு செப்டம்பர் 14- ந் தேதி அந்த அணியின் உரிமத்தை பி.சி.சி.ஐ ரத்து செய்தது. பிறகு எஞ்சிய ஆண்டுகளுக்கு சன்ரைசஸ் ஹைதரபாத் அணிக்கு  ரூ. 425 கோடிக்கு உரிமம் வழங்கப்பட்டது.image

ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதையடுத்து,  மும்பைஉயர்நீதிமன்றத்தில் டெக்கான் கிரானிக்கல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தங்களுக்கு ரூ. 6,046 கோடி இழப்பீடு ஏற்பட்டதாக முறையிட்டது. வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சி.கே. தக்காரை கொண்ட தனிநபர் ஆணையத்தை மும்பை உயர்நீதிமன்றம் நியமித்தது. இந்த வழக்கில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு ஆதரவாக தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது.

தீர்ப்பில் , '' டெக்கான் சார்ஜர்ஸ் அணி இப்போது இருந்திருந்தால் அந்த அணியின் மதிப்பு ரூ. 4,800 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பி..சி.சி.ஐ யின் முடிவு சட்டவிரோதமானது’’ என்றும் தனிநபர் ஆணையம் குறிப்பிட்டுள்ளது

இந்தத் தகவலை  டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக வாதாடிய சட்ட நிறுவனமாக திர் அண்டு திர் அசோசியேட்ஸை சேர்ந்த ஆஷிஸ் பயோஷி உறுதி செய்துள்ளார். தீர்ப்பு காரணமாக ரூ. 4,800 கோடியுடன் வழக்கு விசாரணை தொடங்கிய நாளிலிருந்து  10 சதகிவிகித வட்டியும் சேர்த்து ரூ. 8, 000 கோடி வரை டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு பி.சி.சி.ஐ செலுத்தும் நிலை ஏற்படுள்ளது.இந்த வழக்கில் பி.சி.சி.ஐ மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2017- ம் ஆண்டு இதே போன்ற ஒரு தீர்ப்பு பி.சி.சி.ஐ க்கு எதிராக வழங்கப்பட்டது. கொச்சி டஸ்கர்ஸ் அணியின் உரிமத்தை பி.சி.சி.ஐ ரத்து செய்தது. இது தொடர்பான வழக்கில் கொச்சி டஸ்கர்ஸ் அணி வெற்றி பெற்றது. பி.சி.சி.ஐ இந்த அணிக்கு ரூ. 850 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால், பி.சி.சி.ஐ கொச்சி டஸ்கர்ஸ் அணி உரிமையாளருக்கு தொகையை இன்று வரை செலுத்தவில்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments