கொரோனா பாதிப்பில் வேகம் அதிகரித்துள்ள மூன்று நகரங்கள்
பெங்களூர், ஹைதராபாத், புனே ஆகிய நகரங்களில் தான் கொரோனா பரவல் அதிகளவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் இந்த மூன்று நகரங்களில்தான் பரவல் அதிகளவில் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னர் மும்பை, சென்னை, டெல்லி,அகமதாபாத் ஆகிய நகரங்களில்தான் கொரோனா அதிகளவில் பரவி முன்னிலை வகித்து வந்தது. தற்போது மத்திய மாநில அரசுகளின் தொடர் நடவடிக்கைகள் காரணமாக மகாராஷ்ட்ரா தவிர மற்ற இடங்களில் படிப்படியாக கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.
ஆனால் பெங்களூரில் 13 சதவீதம் பாதிப்பு அதிகரிதது மரணம் அடைந்தோரின் எண்ணிக்கையும் 9 சதவீதம் வரை கடந்த நான்கு வாரங்களில் அதிகரித்து காணப்படுகிறது. மும்பையின் மக்கள் தொகையில் பத்து லட்சத்துக்கு 345 பேர் வீதம் உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன.
நாட்டிலேயே இதுதான் உச்சக்கட்டம். இதைத் தொடர்ந்து அகமாதாபாதிலும் டெல்லியிலும் உயிரிழப்புகள் அதிகளவில் உள்ளன. மக்கள் தொகை அதிகமாகக் கொண்ட சென்னையில் பத்து லட்சம் பேரில் 140 பேர் வீதம் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பாதிப்பில் வேகம் அதிகரித்துள்ள மூன்று நகரங்கள் | #coronavirus https://t.co/6Iyp5gEpOl
— Polimer News (@polimernews) July 18, 2020
Comments