தமிழில் பேசக்கூடாது., இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என தொழிற்சாலை மேலாளர் நிபந்தனை ?
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் வெடிமருந்து தொழிற்சாலையில் தொழிலாளர்களை இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேசுமாறு அதன் மேலாளர் கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் வடமாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் வாக்லூ (( Sanjay whakloo )) என்பவர் மேலாளராகப் பணிபுரிகிறார். தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து மனு அளிக்கச் சென்ற தொழிலாளர்களிடம் ”இங்கே தமிழில் பேசக்கூடாது, ஆங்கிலம் அல்லது இந்தியில்தான் பேச வேண்டும்” என வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் மேலாளரைக் கண்டித்து தொழிற்சாலை முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments