அரிய வகை லெமூர் இன இரட்டையர்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

0 2933
மிருகக்காட்சி சாலையில், அரிய வகை லெமூர் இன இரட்டையர்கள்

சிங்கப்பூரில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ள மிருகக்காட்சி சாலையில், அரிய வகை லெமூர் இன இரட்டையர்கள் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்டன.

11 வயது தந்தை போஸ்கோவுக்கும் ஜப்பானின் யோகோகாமா சரணாலயத்தில் இருந்து 2016 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்த எட்டு வயது தாய் மின்னிக்கும் இந்த இரட்டையர்கள் கடந்த பிப்ரவரி மாதம் பிறந்தன. இன்னும் பெயர் சூட்டப்படாத நிலையில், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அடையாள நோக்கங்களுக்காக மைக்ரோசிப்கள் அவற்றின் தோலில் செருகப்பட்டு காட்சிக்கு திறந்துவிடப்பட்டன.

லெமூர் இனங்கள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இனப்பெருக்கம் செய்வதால் அரியவகை விலங்குகள் பட்டியலில் பாதுகாக்கப்படுவதாக வனவிலங்கு காப்பகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments