கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை மார்ச்சுக்குள் முடிக்க திட்டம் - ஜைடஸ் காடில்லா
கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகளை பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டிருப்பதாக இந்திய மருந்து நிறுவனமான ஜைடஸ் காடில்லா (Zydus Cadila) தெரிவித்துள்ளது.
உலகில் அதிக வருமானம் ஈட்டும் முதல் 10 மருந்து நிறுவனங்களில் ஒன்றான காடிலா, கொரோனாவுக்கு ஜைகோவ்-டி (ZyCov-D) என்ற மருந்தை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து ராய்ட்டஸ் செய்தி நிறுவனத்துக்கு அந்நிறுவன தலைவர் பங்கஜ் படேல் (Chairman Pankaj Patel) அளித்த பேட்டியில், மருந்து மீது முதலாவது கட்ட சோதனையும், மனிதர்கள் மீதான பரிசோதனையும் இன்னும் 3 மாதங்களில் நிறைவடைய வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பரிசோதனை வெற்றியடைந்தால் அந்த மருந்தை ஆண்டுக்கு 10 கோடி (100 million doses) எண்ணிக்கை வரை தங்கள் நிறுவனம் உற்பத்தி செய்யுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டிசிவர் மருந்தை தயாரிக்கும் உரிமத்தை அமெரிக்காவின் கிலியாட் சயின்சசிடம் (Gilead Sciences) பெற்றுள்ளதாகவும், இந்திய அரசு ஒப்புதல் அளித்ததும், முதலாவது மாதத்திலேயே 4 லட்சம் எண்ணிக்கையில் (doses) தங்களது நிறுவனம் உற்பத்தி செய்யுமென்றும் கூறியுள்ளார்.
Comments