திரையரங்குகள், வழிபாட்டு தலங்களுக்கு தற்போது தளர்வுகள் இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜு

0 3803

தமிழகத்தில் திரையரங்குகள், வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபம் ஆகியவற்றுக்கு தற்போது எவ்வித தளர்வுகளும் வழங்கப்பட மாட்டாது என அமைச்சர் கடம்பூர் ராஜு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டால் நோய்த்தொற்று பாதிப்பை கட்டுப்படுத்துவது சவாலாக மாறிவிடும் எனவும், அமைச்சர் தெரிவித்தார்.

திமுக வன்முறை கலாச்சாரம் கொண்ட கட்சி எனவும், அதற்கான உதாரணமாக அக்கட்சியின் எம்.எல்.ஏ. இதயவர்மனிடம் இருந்து துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதை வைத்துக்கொள்ளலாம் என அமைச்சர் கடம்பூர் ராஜு சாடியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments