அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக கொரோனா பரிசோதனை - அமெரிக்க அதிபர் மாளிகை தகவல்
உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாதான் கொரோனா பரிசோதனைகளை அதிக அளவில் மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 3ம் இடத்திலும் உள்ளன. அமெரிக்காவில் 35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 1 லட்சத்து 38 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் பாதிப்பு 10 லட்சத்தையும், பலி 25 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.
இந்நிலையில் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை பத்திரிகை துறை செயலாளர் (( Press Secretary )) கேலெக் மெக்கனி ((Kayleigh McEnany)), அமெரிக்காவில் இதுவரை 4 கோடியே 20 லட்சம் பேருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கடுத்து அதிகபட்சமாக இந்தியாவில் 1 கோடியே 20 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். உலகில் அமெரிக்காவும், இந்தியாவும்தான் அதிக பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் மெக்கெனி கூறினார்.
Comments