சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு பின் சிறையிலடைப்பு

0 2298

சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் கைதான போலீசாரில் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 4 பேரை 30 வரை சிறையிலடைக்க மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வியாபாரிகள் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் இரண்டு நாட்கள் விசாரணை மேற்கொண்டனர்.

மதுரை ஆத்திகுளம் சிபிஐ அலுவலகத்தில் 3வது நாளாக விசாரணை நடத்தப்பட்டு, 5 பேரிடமும் தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்டது.

பின்னர், மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமானந்த குமார் முன்பு அவர்களை ஆஜர்படுத்தினர். தொடர்ந்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் ஆகிய 4 பேரையும் வரும் 30ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதி, காவலர் முத்துராஜுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் முடிவடைவதால் அவரை, மீண்டும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

இதையடுத்து 5 போலீசாரும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு சிறையிலடைப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments