தங்கைக்காக... முகத்தில் 90 தையல்கள்! வீர சிறுவனுக்கு 'கேப்டன் அமெரிக்கா' ஷீல்டை அனுப்பும் கிறிஸ் இவான்ஸ்

0 15129

அமெரிக்காவில் 4 வயது தங்கையை காப்பாற்ற நாயிடம் போராடிய சிறுவனின் முகத்தில் 90 தையல்கள் போடப்பட்டுள்ளன. தங்கையை உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றியதற்காக, சிறுவனுக்கு உலகம் முழுவதுமிருந்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

வியோமின் மாகாணத்திலுள்ள Cheyenne நகரில் கடந்த ஜூலை 9 - ந் தேதி தெருவில் நடந்து கொண்டிருந்த நான்கு வயது சிறுமியை ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்று கடிக்க பாய்ந்துள்ளது. இந்த சமயத்தில் குறுக்கே பாய்ந்த சிறுமியின் சகோதரன் பிரிட்ஜர் வாக்கர் நாயுடன் போராடி தங்கையை காப்பாற்றியுள்ளான் ஆனால், இந்த போராட்டத்தில் சிறுவனின் முகத்தில் நாய் பல முறை கடித்து விட்டது. இருந்தாலும் கடைசி வரை போராடிய சிறுவன் தன் தங்கையை நாயிடத்தில் இருந்து மீட்டெடுத்தான். பிறகு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு 2 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. முகத்தில் 90 தையல்கள் போடப்பட்டன. தீவிர சிகிச்சை காரணமாக சிறுவன் உயிர் பிழைத்து வீடு திரும்பினான். இந்த சம்பவம் குறித்து 'எங்கள் இருவரில் யாராவது  ஒருவர் பலியாக வேண்டுமென்றால் அது நானாகத்தான் இருக்க வேண்டும் '' என்று தன் தந்தையிடமும் பிரிட்ஜர் வாக்கர் கூறியிருக்கிறான். தங்கை மீது அவனுக்கு அவ்வளவு பாசம்.
image

பிரிட்ஜர் வாக்கர் வீடு திரும்பியதும் அவனின் அத்தை நிக்கி வாக்கர் . சிறுவனின் முகத்தில் காயங்களுடன் இருக்கும் புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வெளியிட்டார். அதில், ''எங்கள் வீட்டு ஹீரோ இவன்தான், கோர முகம் காட்டிய நாயிடத்திலிருந்து தங்கையை காப்பாற்றி கையில் தூக்கிக் கொண்டு ஓடி தப்பித்தவன். இjய்போது 90 தையல்களுடன் வீட்டில் ஓய்வெடுத்து  வருகிறான். எங்கள் குடும்பத்தின் துணிச்சலான இந்த iபையன் பற்றி அனைத்து சூப்பர் ஹீரோக்களும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். தற்போது  முகத்தில் ஏற்பட்டுள்ள காயங்களால் அவனால் சரிவர சிரிக்க கூட முடியவில்லை. ஆனால், பிரிட்ஜர் வாக்கரின் மன அழகு அலாதியானது. இந்த சம்பவத்தால், நாயின் உரிமையாளர்களுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் எந்த மனக்கசப்பும் இல்லை. இந்த சம்பவத்தால் எங்கள் இரு குடும்பங்களும் அன்பினால் இணைந்துள்ளன. பிரிட்ஜரின் செயலுக்கான அவனை பாராட்டி சொல்லப்படும் கருத்துகள் உற்சாகமளிக்கின்றன '' என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த இன்ஸ்டாகிராம் பதிவு வைரலனதையடுத்து,  பல பிரபலங்கள் சிறுவனுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர். அவெஞ்சர்  நாயகன் கிறிஸ் இவான்ஸ் சிறுவனுக்கு அனுப்பிய வீடியோ மெசெஜில் . '' உன்னைப் போன்ற ஒருவனை சகோதரனாக அடைய உன் தங்கை கொடுத்து வைத்திருக்க வேண்டும். உன்னை பெற்றதற்காக உன் பெற்றோர் பெருமையடைவார்கள். என்னிடத்திலுள்ள கேப்டன் ஆஃப் அமெரிக்கா ஷீல்டை உனக்கு உறுதியாக அனுப்பி வைக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் நடிகை Anne Hathaway, உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்களும் சிறுவனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments