தென்சீனக் கடல் பகுதி அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது - இந்தியா
தென்சீனக் கடல் பகுதியை சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில், அப்பகுதியை அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது என்று இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.
தென்சீனக் கடல் பகுதி தொடர்பாக சீனாவுக்கும், அதன் அண்டை நாடுகளான வியத்நாம், தைவான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. குறிப்பாக, அப்பகுதி முழுவதும் தங்களுக்கு சொந்தமானது எனத் தெரிவித்து அங்கு படைபலத்தை சீனா அதிகரித்து வருவதால் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, தென் சீனக் கடல் பகுதி அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது என்றார். தென்சீனக் கடல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவ வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.
Comments