இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 34 ஆயிரத்து 956 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் கொரோனாவால் மேலும் 687 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 3 ஆயிரத்து 832 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 25 ஆயிரத்து 602ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் 3 லட்சத்து 42 ஆயிரத்து 473 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 6 லட்சத்து 35 ஆயிரத்து 757 பேர் குணமாகியுள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 84 ஆயிரத்து 281ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 194ஆகவும் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பாதிப்பு 1 லட்சத்து 56 ஆயிரத்தையும், டெல்லியில் 1 லட்சத்து 18 ஆயிரத்தையும் கடந்துள்ளது.
In solidarity with the over 10L persons who have tested Covid19 positive in India by now.
— covid19indiaorg (@covid19indiaorg) July 17, 2020
Remembering the 25,609 persons we have lost to this infection till date.
Thankful to the selfless service of the frontline workers in the midst of this crisis.
Stay safe India! pic.twitter.com/geOKDC7qOT
Comments