”போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கை கைவிட முதலமைச்சர் அழுத்தம் தருகிறார்” - மணிப்பூர் காவல்துறை அதிகாரி
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கின் விசாரணையை கைவிடுமாறு மணிப்பூர் முதலமைச்சர் அழுத்தம் கொடுப்பதாக, அம்மாநில காவல்துறை அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் தடுப்பு காவல் கண்காணிப்பாளரக உள்ள தவுனோஜம் பிருந்தா என்பவர், இம்பாலில் உள்ள மாநில உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 2018-ம் ஆண்டு சுமார் 28 கோடி மதிப்பிலான போதைப்பொருள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சந்தேல் மாவட்ட பாஜக தலைவராக உள்ள லுகோசே ஸோவை முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கும் நிலையில், வழக்கை கைவிட முதலைமைச்சர் பிரேண் சிங் துறைக்கு அழுத்தம் கொடுப்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Comments