குல்பூஷண் ஜாதவை சந்திக்க இந்திய குழுவுக்கு 2 மணி நேரம் மட்டுமே அனுமதி
பாகிஸ்தான் சிறையில் மரண தண்டனை கைதியாக அடைபட்டிருக்கும் இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் அரசு 2 மணி நேரம் மட்டுமே அனுமதியளித்தது.
சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவின்படி தடையற்ற, பாகிஸ்தானின் குறுக்கீடுகள் அற்ற நிபந்தனகளற்ற சந்திப்புக்கு அனுமதிக்கும்படி இந்தியா பாகிஸ்தானை வலியுறுத்திய போதும் இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்து விட்டது. இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் விதித்துள்ளது.
இந்திய குழுவினர் ஜாதவை சந்திக்கும் போது கேமராக்கள் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்டதாகவும் , குல்பூஷண் ஜாதவ் மிகுந்த சோர்வுடன் காணப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக பொய் வழக்குப் போட்டு இந்திய அதிகாரியை துன்புறுத்தும் பாகிஸ்தான் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவையும் மதிக்காமல் இருப்பதாக இந்தியா பாகிஸ்தானுக்கு கடும் கண்டனததைப் பதிவு செய்துள்ளது. மேல்முறையீடு செய்ய குல்பூஷண் ஜாதவ் விரும்பவில்லை என்று பாகிஸ்தான் அரசு அறிவித்த நிலையில் பாகிஸ்தான் பொய்யுரைப்பதாக இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது.
Comments