உலக அளவில் 1.39 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு
உலக அளவில் புதிதாக 2 லட்சத்து 48ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், இதுவரை பெருந்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 40 லட்சத்தை நெருங்குகிறது.
பல்வேறு நாடுகளில் ஒரே நாளில் 5,700 பேர் வரை உயிரிழந்ததால், பலி எண்ணிக்கையும் 6 லட்சத்தை நெருங்கி வருகிறது. அமெரிக்காவில் ஒரே நாளில் 73 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அந்நாட்டில் மொத்த பாதிப்பு 37 லட்சத்தை நெருங்குகிறது. பிரேசிலிலும் ஒரே நாளில் 43 ஆயிரம் பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
அங்கு புதிதாக 13ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 1200 பேரும், அமெரிக்காவில் 963 பேரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் பாதிப்பு குறைவாக இருந்தாலும் உயிரிழப்பில் நாள் ஒன்றுக்கு 500 பேர் வரை பலியாகுகின்றனர்.
தென் ஆப்பிரிக்கா, கொலம்பியா, ஈரான், பெரு, ரஷ்யா ஆகிய நாடுகளிலும் ஒரே நாளில் 100-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். அதே சமயம் வைரஸ் பாதிப்பில் இருந்து 82லட்சத்து 77ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
Comments