சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
சென்னையில் அடையாறு, திருவான்மியூர்,நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தவாறே பயணம் செய்தனர்.
தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, செம்பாக்கம், நன்மங்கலம், முடிச்சூர், பம்மல், அனகாபுத்தூர், சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஓரிக்கை, செவிலிமேடு, ஒலிமுகமதுபேட்டை, உத்திரமேரூர் மற்றும் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.
Comments