ஒரே நாளில் சென்னையில் 1,157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று தணிந்து, பிற மாவட்டங்களில் கணிசமாக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் புதிதாக ஆயிரத்து 157 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது. சென்னையில் மட்டும் சுமார் 82 ஆயிரம் பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அதேநேரம், 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பியுள்ளனர். அண்டை மாவட்டங்களான திருவள்ளூரில் அதிகபட்சமாக 526 பேருக்கும் ,செங்கல்பட்டில் 179 பேருக்கும் , காஞ்சிபுரத்தில் 67 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி ஆனது.
மதுரையில் 267 , வேலூரில் 253, திருவண்ணாமலையில் 212 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர, தூத்துக்குடியில் 171, கன்னியாகுமரியில் 146, ராணிப்பேட்டை மற்றும் விருதுநகரில் தலா 145, திருநெல்வேலியில் 130,திண்டுக்கல்லில் 126, விழுப்புரத்தில் 105 பேருக்கும் புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆனது.
சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் மட்டும் 3 ஆயிரத்து 392 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Here's the Info Graphic summary of Covid-19 cases in Chennai. #Covid19Chennai #GCC #Chennai #chennaicorporation pic.twitter.com/HR9pkP4roY
— Greater Chennai Corporation (@chennaicorp) July 16, 2020
Comments