இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம்
இன்போசிஸ் நிறுவன பங்கின் ஏற்றம் காரணமாக மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.
இன்போசிஸ் நிறுவனம் எதிர்பார்த்ததை விட முதல் காலாண்டில் 11 சதவீதம் அதிகமாக 4233 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. அதனால் இதுவரை இல்லாத அளவில் அந்நிறுவன பங்கு விலை 9 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து 910 ரூபாயை எட்டியது. இதன் காரணமாக சென்செக்ஸ் 420 புள்ளிகள் உயர்ந்து 36 ஆயிரத்து 472ல் நிலை கொண்டது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 122 புள்ளிகள் அதிகரித்து 10 ஆயிரத்து 740ஐ எட்டியது. தகவல் தொழில்நுட்பம், வங்கி, நிதி சேவை, உலோகம் துறை சார்ந்த நிறுவன பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமானது.
அந்நிநிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் குறைந்து, 75 ரூபாய் 18 காசுகளாக இருந்தது.
Comments