மும்பையில் தென்மேற்குப் பருவமழை தீவிரம்
மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளிலும் சாலைகளிலும் தேங்கியுள்ள நிலையில், மழைநீரில் நீந்தியபடி வாகனங்கள் சென்றுவருகின்றன.
கோவா, மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மும்பையில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
வியாழன் காலை எட்டரை மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக பாந்த்ராவில் 21 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
ஒர்லியில் 20 சென்டிமீட்டரும், தாதரில் 14 சென்டி மீட்டரும், மகாலட்சுமியில் 13 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. கனமழையால் கிங்ஸ் சர்க்கிள் என்னுமிடத்தில் சயான் காவல்நிலையம் முன்பு சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் அனைத்தும் தண்ணீரில் நீந்தியபடி சென்றன.
ஜூலை மாதத்தில் மும்பையில் சராசரி மழையளவு 84 சென்டிமீட்டராகும். ஜூலை 15 வரை 82 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Comments