கனமழையால் மும்பை மாலாட்-ல் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் பலி பலர் காயம்

0 1853
கனமழை காரணமாக மும்பை மாலாட் பகுதியில் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த தில் ஒருவர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

மலாட்-ன் மால்வானி என்ற இடத்தில் உள்ள அப்துல் ஹமீது சாலையில் பிற்பகல் இந்த விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்டுப்பணி வீரர்கள், கட்டிட இடிபாடுகளில் இருந்து இரண்டு பேரை மீட்டனர்.

காயமடைந்த 4 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மும்பை பொது அஞ்சலகத்திற்கு எதிரே உள்ள மோகன் மேன்ஷன் என்ற கட்டிடமும் இடிந்து விழுந்ததில் சிலர் உயிருடன் புதைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments