அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுக்கு விமான சேவை துவங்குகிறது

0 4359
அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுக்கு இடைக்கால அடிப்படையில் கட்டுப்பாடுகளுடன் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுக்கு இடைக்கால அடிப்படையில் கட்டுப்பாடுகளுடன் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பேசிய அவர், ஏர் பிரான்ஸ் நிறுவனம் வரும் 18 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை டெல்லி, மும்பை, பெங்களூரு நகரங்களில் இருந்து பாரிசுக்கு 28 விமானங்களை இயக்க இருப்பதாக குறிப்பிட்டார்.

அதே போன்று வரும் 17 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை அமெரிக்காவுக்கு 18 விமானங்கள் இயக்கப்பட இருப்பதாக கூறினார். ஜெர்மனியில் இருந்து இந்தியாவுக்கு விமானங்களை இயக்குவதற்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதுவரை வந்தே பாரத் திட்டத்தின் கீழ்  வெளிநாடுகளில் சிக்கியிருந்த  6 லட்சத்து 87 ஆயிரத்து 467 இந்தியர்கள்  இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் ஹர்தீப்சிங்புரி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments