கொரோனாவிலிருந்து கர்நாடகாவை கடவுளால்தான் காக்க முடியும் - கர்நாடகா அமைச்சர்

0 2730
கொரோனாவில் இருந்து கர்நாடகாவை கடவுளால்தான் காக்க முடியுமென அந்த மாநில சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.

கொரோனாவில் இருந்து கர்நாடகாவை கடவுளால்தான் காக்க முடியுமென அந்த மாநில சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், உயிரிழப்பு 900ஐ கடந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஸ்ரீராமுலு, உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 2 மடங்காக அதிகரிக்க போகிறது எனவும், 100 சதவீதம் உயர போகிறது எனவும் தெரிவித்தார். 

மாநில அரசால் கொரோனா நிலவரம் சரியாக கையாளப்படவில்லை என்ற கேள்விக்கு அதுதொடர்பாக வதந்தி பரப்புவதை நிறுத்தும்படியும், அந்த பரவலை யாராலும் நிறுத்த முடியாது  என்றார்.

கொரோனா நிலவரத்தை கையாள்வதில் அமைச்சர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகவும், இதனால் ஏற்பட்ட விரக்தியையே அமைச்சர் இவ்வாறு வெளிபடுத்தியுள்ளார் எனவும்  சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments