திருக்குறளுக்கு புகழாரம் சூட்டும் பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவு
திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
அண்மையில் லடாக் சென்ற பிரதமர் மோடி, இந்திய வீரர்கள் மத்தியில் உரையாற்றியபோது, மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே ஏமம் படைக்கு என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார்.
இந்த உரை மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில், அதுகுறித்து தமிழில் வெளியான கட்டுரை ஒன்றை மேற்கோள் காட்டி, ட்விட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும்.
தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனடைவர் என நம்புவதாக, தமிழிலும், ஆங்கிலத்திலும் மோடி ட்வீட் செய்துள்ளார்.
தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன்.
— Narendra Modi (@narendramodi) July 16, 2020
Comments