சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்களூக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ்க்கு எதிராக மனு ஒத்திவைப்பு

0 1723
ராஜஸ்தானில் எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு  சபாநாயகர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாத காரணத்தால் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்களான 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பபட்டு இருந்தது.

அந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்களும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

விசாரணையின் போது மனுவில் சில குறைபாடுகள் இருப்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டி அதனை திருத்தம் செய்ய அறிவுறுத்தினர். அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று சச்சின் பைலட் தரப்பில் கோரியதை அடுத்து விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments