சுஷாந்த் சிங் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட காதலி ரியா சக்ரவர்த்தி அமித் ஷாவிடம் கோரிக்கை
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி அவரது காதலி நடிகை ரியா சக்ரவர்த்தி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அமித்ஷாவின் அதிகாரப்பூர்வ பக்கத்தை டேக் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், தன்னை சுஷாந்தின் காதலி எனவும், அரசு மீது தான் முழு நம்பிக்கை வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சுஷாந்த் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தாம் கைகூப்பி கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
என்ன மாதிரியான அழுத்தம் சுஷாந்தை இந்த முடிவுக்கு தள்ளியது என்பதை தெரிந்து கொள்வதற்காகவே சிபிஐ விசாரணை கோருவதாகவும் ரியா தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக இன்ஸ்டாகிராமில் தனக்கு வந்த கொலை மற்றும் கற்பழிப்பு மிரட்டல் குறித்தும் ரியா சக்ரவர்த்தி பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments