3 பேரை கொன்று கிணற்றில் புதைத்த வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

0 2087
விழுப்புரம் அருகே 3 பேரை கொலை செய்து வீட்டின் பின்புற கிணற்றில் புதைத்த வழக்கில் ஒருவருக்கு மூன்று ஆயுள் தண்டனையும், இன்னொருவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் அருகே 3 பேரை கொலை செய்து வீட்டின் பின்புற கிணற்றில் புதைத்த வழக்கில் ஒருவருக்கு மூன்று ஆயுள் தண்டனையும், இன்னொருவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

எம்.குச்சிப்பாளையத்தை சேர்ந்த முருகன், தனது சகோதரர் மதியரசன் மற்றும் மூர்த்தியுடன் சேர்ந்து சேகர், அவருடைய மகள் லாவண்யா, கணவர் சிலம்பரசனை கொலை செய்து 2009இல் புதைத்துள்ளார்.

தமக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில்  முருகனின் மகள் பார்கவி தெரிவிக்கவே மூவரும் கைது செய்யப்பட்டனர்.   வழக்கு காலத்தில் மூர்த்தி இறக்கவே, 2 பேருக்கு எதிராக விசாரணை நடத்தி விழுப்புரம் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

அதில் முருகனுக்கு 3 ஆயுள் தண்டனை மற்றும் 75 ஆயிரம் அபராதமும், கொலை குற்றத்தை மறைத்ததற்கு கூடுதலாக 2 வருடம் சிறைதண்டனையும் அளிக்கப்பட்டது. மதியரசனுக்கு ஒரு ஆயுள் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், கொலையை மறைத்தற்கு கூடுதலாக 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments