சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்ப அனுமதி வழங்க கோரிய வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

0 2844
ஊரடங்கால் வேலை வாய்ப்பை இழந்து பாதிக்கப்பட்டு உள்ள மக்கள், சென்னையை விட்டு சொந்த ஊருக்கு திரும்ப அனுமதிக்கக்கோரி, தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டு உள்ளது.

பெசன்ட் நகர் சேசுபாலன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கொரோனா பரவலை தடுக்க அறிவிக் கப்பட்ட ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பையும், வருமானத்தையும் இழந்து, பிழைப்பு தேடி வந்த மக்கள் சென்னையில் வாழ வழியில்லாத சூழல் உருவாகி உள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார். 

திருமணம், மரணம் மற்றும் மருத்துவ காரணங் களுக்கு மட்டுமே இ - பாஸ் வழங்கப் படுவதால், ஊரை காலி செய்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பும் மக்களுக்கு நிபந்த னைகளுடன்அனுமதி வழங்க வேண்டும் அல்லது உணவு, உறைவிட வசதிகளை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க உத்தர விட வேண்டும் என மனுவில் சேசுபாலன்கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட  நீதிபதி கள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments