நடிகை வனிதா மீது நடவடிக்கை கோரி சூர்யாதேவி காவல் நிலையத்தில் புகார்

0 4509
நடிகை வனிதா தன்னைப் பற்றி அவதூறான செய்தி பரப்புவதாக சூர்யா தேவி எனும் பெண்மணி வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகை வனிதா தன்னைப் பற்றி அவதூறான செய்தி பரப்புவதாக சூர்யா தேவி எனும் பெண்மணி வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டது பற்றி கடுமையாக விமர்சித்து Youtube ல் சூர்யாதேவி எனும் பெண்மணி வீடியோ வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து அவர் மீது போரூர் காவல் நிலையத்தில் வனிதா புகார் அளித்தார். மேலும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சூர்யா தேவி கஞ்சா வியாபாரி என்றும், வனிதா கூறியிருந்தார்.

இந்த நிலையில், வனிதா அவதூறான வார்த்தைகள் பேசி தனது மனதை புண்படுத்தி உள்ளதால், அவர் மீது நடவடிக்கை கோரி, வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையில் சூர்யாதேவி புகார் அளித்துள்ளார்.

தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக பா.ஜ.க. மாநில தலைவராக இருந்தபோது அவரைப் பற்றி அவதூறாக பேசி யூடியூபில் வீடியோ வெளியிட்டதற்காக சூர்யாதேவி கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments