ஜெயராஜ், பென்னிக்ஸ் இரட்டை கொலை வழக்கு : 5 போலீசாரிடம் 3வது நாளாக சிபிஐ விசாரணை

0 1633
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசார் 5 பேரிடமும் மூன்றாவது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசார் 5 பேரிடமும் மூன்றாவது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் இரட்டை கொலை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சிபிஐ அதிகாரிகள், கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

முதற்கட்டமாக தந்தை, மகனை கைது செய்த காவலர் முத்துராஜை சாத்தான்குளம் அழைத்து சென்று விசாரணை நடத்திய அதிகாரிகள், தொடர்ந்து நேற்றிரவு 5 பேரையுமே சாத்தான்குளத்தில் சம்பவ இடங்களுக்கு நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் மதுரை ஆத்திகுளம் சிபிஐ அலுவலகத்தில், 3வது நாளாக 5 பேரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணைக்கு பின் 5 போலீசாரும் இன்று மாலை 5 மணியளவில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments