சொந்த வயலில் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்ட சத்தீஸ்கர் காங்கிரஸ் எம்.பி.

0 1881
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பூலோதேவி நேதம் தனக்குச் சொந்தமான வயலில் நாற்று நடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பூலோதேவி நேதம் தனக்குச் சொந்தமான வயலில் நாற்று நடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த மார்ச் மாதம் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பூலோதேவி நேதம். இவர் கோண்டாகானில் தனக்குச் சொந்தமான வயலில் சேற்றில் இறங்கி நெல் நாற்றும் நடும் பணியைச் செய்துள்ளார்.

வேளாண் பணிகளுக்கு ஆள் கிடைக்காத நிலை உள்ளதாகவும், வேளாண் குடியில் பிறந்த தான் நாற்று நடுவது குறித்துப் பெருமைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பரபரப்பான அரசியல் பணிகளுக்கு இடையில், சொந்த வயலில் நாற்று நடும் பணி செய்தது தனக்கு மிகுந்த ஆறுதலைத் தருவதாகப் பூலோதேவி நேதம் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments