கொரோனா மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் அனைத்து நாடுகளுக்கும் சமமாக அளிக்க 8 நாடுகளின் தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தல்
கொரோனா மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் அனைத்து நாடுகளுக்கும் சமமாக அளிக்க வேண்டுமென உலக நாடுகளை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த 100க்கும் மேற்பட்ட மருந்துகள் மீது உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இதில் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் மனிதர்களிடம் 3ம் கட்ட பரிசோதனை நடத்தப்பட்டு விரைவில் முடிவு வெளியிடபடவுள்ளது.
இந்நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ, தென்னாப்பிரிக்க அதிபர் ராம்போசா, ஸ்பெயின், நியூசிலாந்து, எத்தியோப்பியா உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்கள், கூட்டாக கட்டுரை ((article )) எழுதியுள்ளனர்.
அதில் நாடுகளுக்கு இடையே வேறுபாடு காட்டாமல் அனைத்து நாடுகளுக்கும் மருந்து அளிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். ட்விட்டரில் ட்ரூடோ வெளியிட்ட பதிவில், அனைத்து நாட்டு மக்களுக்கும் வேறுபாடு இல்லாமல் மருந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், இதனால் உயிர்களை காக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Comments