சீராய்வு மனு விவகாரத்தில் குல்பூஷண் ஜாதவுக்கு நிபந்தனையற்ற அனுமதி வழங்க பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தல்
மரண தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யும் விவகாரத்தில் குல்பூஷண் ஜாதவுக்கு நிபந்தனையற்ற அனுமதி வழங்க வேண்டுமென பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தியுள்ளது.
பலூசிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம்சாட்டி பாகிஸ்தானால் 2016இல் கைது செய்யப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதை குல்பூஷண் நிராகரித்துவிட்டதாக பாகிஸ்தான் அண்மையில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, பாகிஸ்தானின் 4 ஆண்டுகால பொய்யின் தொடர்ச்சியே இது என்றார். இந்த விவகாரத்தில் சட்ட உபாயங்கள் குறித்து இந்தியா ஆராய்வதாகவும், இந்தியர்களின் உயிரை காக்க அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments