அசாம் காசிரங்கா பூங்காவில் வெள்ளத்தில் சிக்கி 66 விலங்குகள் உயிரிழப்பு
அசாமில் உள்ள புகழ்பெற்ற காசிரங்கா தேசிய பூங்காவில் ((Kaziranga national park)) வெள்ளத்தில் சிக்கிய 170 விலங்குகள் மீட்கப்பட்டுள்ளன.
உலகின் மிகப்பெரிய நதிகளில் ஒன்றான பிரம்மபுத்திரா நதி, திபெத்தில் உருவாகி இந்தியாவின் அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக ஓடி வங்கதேசம் செல்கிறது. பருவமழை தீவிரம் அடைந்ததால் அந்த நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.
இதில் அசாம் மாநிலத்தின் பல இடங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதில் புகழ்பெற்ற காசிரங்கா தேசிய பூங்காவிலும் வெள்ளநீர் புகுந்துள்ளது.
இதனால் அங்குள்ள காண்டாமிருகங்கள், மான்கள், யானைகள் உள்ளிட்ட விலங்குகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. இதுவரை வெள்ளத்தில் சிக்கி 66 விலங்குகள் உயிரிழந்து விட்டதாகவும், காண்டா மிருக குட்டி உள்ளிட்ட 170 விலங்குகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பூங்கா இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Comments