நாட்டில் 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 32,695 பேருக்கு கொரோனா

0 1786
நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9,68,876ஆக அதிகரிப்பு

நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 32 ஆயிரத்து 695 பேருக்கு ஒரே நாளில் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 68 ஆயிரத்து 876ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 606 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அத்தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 915ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 146 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 6 லட்சத்து 12 ஆயிரத்து 815 பேர் குணமாகியுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்து 75 ஆயிரத்து 640ஆகவும், பலி எண்ணிக்கை 10 ஆயிரத்து 928ஆகவும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 1 லட்சத்து 51 ஆயிரத்தையும், டெல்லியில் 1 லட்சத்து 16 ஆயிரத்தையும் பாதிப்பு கடந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments