சவுரவ் கங்குலி தன்னை வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்

0 4868
சவுரவ் கங்குலியின் அண்ணனுக்கு கொரோனா பாதிப்பு

இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலியின் அண்ணனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, சவுரவ் கங்குலி தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

கங்குலியின் அண்ணனும் வங்காளக் கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலருமான சினேகாசிஷ் கடந்த சில நாட்களாகக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் கொல்கத்தாவின் பெல்லி வியூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சவுரவ் கங்குலியும் அவர் அண்ணனும் ஒரே வீட்டில் தங்கி இருந்ததால் சவுரவ் கங்குலி தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments