ராமர் பிறந்தது நேபாளத்தில் என்று கூறிய சர்மா ஒலிக்கு வலுக்கும் எதிர்ப்பு
நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி அயோத்தி ராமர் குறித்த சர்ச்சையை எழுப்பியதன் மூலம் ஆட்சிபுரியும் அனைத்துத் தார்மீக தகுதிகளையும் இழந்துவிட்டதாகவும் அவர் பதவி விலக வேண்டும் என்றும் நேபாள எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இது குறித்து நேபாள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் சர்மா விடுத்துள்ளஅறிக்கையில் பிரதமரின் பேச்சுக்கும் நடத்தைக்கும் கடுமையான கண்டனம் தெரிவித்து தங்கள் கட்சி அதில் முரண்படுவதாக தெரிவித்துள்ளார்.
அயோத்தி குறித்த சர்மா ஒலியின் கருத்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாடா அல்லது பிரதமரின் தனிப்பட்ட கருத்தா என்று அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
ராமர் அயோத்தியில் பிறக்கவில்லை என்றும் நேபாளத்தில் தான் பிறந்தார் என்றும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த சர்மா ஒலி, ஆட்சியில் இருப்பதற்கு எந்த வித தார்மீக உரிமையும் இல்லை என்று கண்டனம் வலுத்து வருகிறது.
Comments