ஃபிங்கர் பகுதியில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள சீனா மறுப்பு
இந்திய சீன ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தையை அடுத்து ஓரளவுக்கு லடாக் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளை திரும்பப் பெற சீனா ஓப்புக் கொண்ட போதும் ஃபிங்கர் மலைத்தொடரில் இருந்து முழுமையாகப் படைகளை விலக்கிக் கொள்ள ஒப்புதல் அளிக்கவில்லை.
ஆயினும் அங்கிருந்து சீனா தனது படைகளை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இந்தியாவின் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய கிழக்கு லடாக்கின் கல்லான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா போஸ்ட் ஆகிய பகுதிகளில் இருந்து படைகளை முழுமையாக திரும்பப் பெற சீனா ஒப்புக் கொண்டுள்ளது.
ஆனால் ஃபிங்கர் பகுதியில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள சீனா ஒப்புக் கொடுக்கவில்லை. ஃபிங்கர் 4 பகுதியின் பிளாக்டாப், கிரீன் டாப் போன்ற சில இடங்களில் இருந்து மட்டும் சீனப் படைகள் தங்கள் கட்டுமானங்களை நீக்கியுள்ளன.
ஆனால் ஏப்ரலுக்கு முன்பு இருநாட்டுப் படைகளும் எந்த இடத்தில் நிலைகொண்டிருந்தனவோ அந்த இடம் வரை சீனப்படைகள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று இந்தியத் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை சுமார் 15 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் இதனை இந்தியா சீனாவிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
Comments