2048-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை 160 கோடியாக உயரும் - ஆய்வறிக்கையில் தகவல்
2048-ம் ஆண்டு இந்தியாவின் மக்கள்தொகை 160 கோடியாக உயரக்கூடும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய நோய்த் தாக்கத்தின் அடிப்படையில் 2017ம் ஆண்டின் தரவுகளை கொண்டு லான்செட் இழதில் வெளியாகியுள்ள அறிக்கையின்படி, 2100ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 100 கோடியாக குறைந்தாலும், அந்த சமயம் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் பணிக்கு செல்லும் வயதினரில் பெரும் சரிவு ஏற்படும் எனவும், அவை பொருளாதார வளர்ச்சியைத் தடுத்து உலக சக்திகளின் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நூற்றாண்டின் இறுதியில் புதியதோர் உலகிற்கு நாம் தயாராகி கொண்டிருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments