கொரோனா சிகிச்சைக்காக தமிழகம் முழுவதும் ஒரே வழிகாட்டுதல் சிகிச்சை முறை அறிமுகம்
கொரோனா சிகிச்சைக்காக தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒரே வழிகாட்டுதல் சிகிச்சை முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழக அரசு அமைத்த மருத்துவ வல்லுநர் குழு அறிவுரையின்படி, இது நடைமுறைக்கு வந்துள்ளது. சென்னை யில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சோதனை முறையில் நோயாளிகளுக்கு 4 ஆர்ம் ட்ரையல் என்ற முறை மூலம், 4 மருந்துகள் கொடுத்து அளித்த சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைத்தது.
இதன் அடிப்படையில், அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளிகள், அறிகுறியுடன் கூடிய நோயாளிகள் , தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் என 3 வகையாக பிரித்து குறிப்பிட்ட மருந்துகள் வழங்க அரசு மருத்துவமனைகளுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது.
இதற்காக, அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட REMDESIVIR, ACTEMRA - TOCILIZUMAB என்ற விலை உயர்ந்த மருந்துகள் மற்றும் பல்ஸ் ஆக்சிமீட்டர் உள்ளிட்ட வைகளை, மாவட்ட மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசு மருத்துவமனைகளின் வாசலிலும் ஆக்சிஜன் சிலிண்டருடன் கூடிய இருக்கைகள் கொண்டு நோயாளிகளை அழைத்து செல்லும் வழிமுறைகளையும் பின்பற்ற சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா சிகிச்சைக்காக தமிழகம் முழுவதும் ஒரே வழிகாட்டுதல் சிகிச்சை முறை அறிமுகம் | #CoronaTreatment https://t.co/mUhFS4zUyF
— Polimer News (@polimernews) July 15, 2020
Comments