டோக்கியோவில் கொரோனா பரவல் குறித்து ரெட் அலர்ட் எச்சரிக்கை
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனா பரவல் குறித்து அதிகபட்ச ரெட் அலர்ட் ( highest “red” level) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகின் 3ஆவது பொருளாதார சக்தியாக திகழும் ஜப்பானில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் இருந்தாலும் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் தலைநகர் டோக்கியோவில் கடந்த 7 நாள்களாக புதிய பாதிப்புகள் அதிக அளவில் உறுதியாகி வருகிறது.
குறிப்பாக, 4 நாள்களாக 200க்கும் மேல் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து டோக்கியோவில் கொரோனா பரவல் நிலை மிகவும் தீவிரமாக (rather severe) இருப்பதாக கூறி, அதிகபட்ச ரெட் அலர்ட் எச்சரிக்கை அறிவிப்பை ஆளுநர் யுரிகோ கொய்கி (Yuriko Koike) வெளியிட்டுள்ளார். டோக்கியோ மக்களை அத்தியாவசியமில்லாத பயணங்களை தவிர்க்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments