ஈரான் சாபஹார் கூட்டு ரயில் திட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை-இந்தியா திட்டவட்டம்
ஈரானில் அமையுள்ள பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த சாபஹார் கூட்டு ரயில் திட்டத்தில் பங்கேற்பதில் எந்த மாற்றமும் இல்லை என இந்தியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
சாபஹார் துறைமுகத்தில் இருந்து ஆப்கன் எல்லைக்க் ஈடாக, சகேதான் நகர் வரை சுமார் 650 கிலோ மீட்டர் நீளத்திற்கு இருப்புப் பாதை அமைக்கும் இந்த திட்டத்தில் இருந்து இந்தியாவை நீக்குவதாக ஈரான் நேற்று அறிவித்தது. இந்திய தரப்பில் இருந்து நிதி மற்றும் கட்டுமான தாமதம் ஏற்படுவதால் இந்த முடிவு என்று ஈரான் கூறினாலும், சீனாவுடன் 25 ஆண்டுகளுக்கு அது ஏற்படுத்தி உள்ள ஒப்பந்தமே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன்னர் கையெழுத்தான இந்த திட்டத்தில் இருந்து இந்தியா பின்வாங்காது என டெஹ்ரான் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. எஃகு பொருள்கள் மீது அமெரிக்காவின் தடை உள்ளதால், அதை சப்ளை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அது விரைவில் நீக்கப்பட்டு திட்டமிட்டபடி ரயில் திட்டத்தை நிறைவேற்றுவதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments