அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம்
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் விலையில்லா பாட புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்க தாமதமாவதால் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு வரவழைத்து பாட புத்தகங்கள் வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, இன்று முதல் முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி சில பாடங்களின் குறிப்புகளை வீடியோ பதிவாக காணும் வகையில் மடிக் கணினியில் பதிவேற்றம் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள் முக கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியை பின்பற்றி பாட புத்தகங்களை பெற்று சென்றனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம் #TamilNadu | #SchoolStudents | #SchoolBooks https://t.co/yKQwGyksSt
— Polimer News (@polimernews) July 15, 2020
Comments