தமிழகத்தை முன்னேறச் செய்து முத்திரை பதித்த பெருந்தலைவர் காமராஜர்-முதலமைச்சர் புகழாரம்
தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் முன்னேறச் செய்து முத்திரை பதித்த பெருந்தலைவர் காமராஜர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், 1954ஆம் ஆண்டில் காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின், தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெல்லாம் பள்ளிக்கூடங்களை அமைத்து, தமிழ்ச் சமுதாயத்தைப் படிப்பறிவுமிக்க அறிவார்ந்த சமுதாயமாக உருவாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பல தொழிற்சாலைகளை நிறுவித் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டதைக் குறிப்பிட்டுள்ளார்.
நீர்வள மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழ்நாட்டில் பல அணைகளைக் கட்டிய பெருமைக்குரியவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
எளிமைக்கும், நேர்மைக்கும் பெயர் பெற்ற காமராஜர் முதலமைச்சர் பதவியையும் துறந்து நாட்டுக்காகப் பணியாற்றியவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Comments