நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் மேலும் 29,429 பேருக்கு கொரோனா , 582 பேர் உயிரிழப்பு

0 3205

நாடு முழுவதும் மேலும் 29 ஆயிரத்து 429 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 36 ஆயிரத்து 181ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 582 பேர் பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 309ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு 3 லட்சத்து 19 ஆயிரத்து 840 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 5 லட்சத்து 92 ஆயிரத்து 32 பேர் குணமாகி உள்ளனர்.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 67 ஆயிரத்து 665ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 695ஆகவும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பாதிப்பு 1 லட்சத்து 47 ஆயிரத்தையும், டெல்லியில் பாதிப்பு 1 லட்சத்து 15 ஆயிரத்தையும் கடந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments